ஈரானில் கடந்த சில நாட்கள் முன் அமெரிக்காவின் F32 ரக போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டன.
தாக்குதலின்போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த 2 அமெரிக்க விமானிகள் ஈரான் நிலத்தில் தரையிறங்கினர்.
இதில் ஒருவரை மீட்டதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில் இன்னொருவர் நிலை குறித்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
அந்த விமானியை பிடித்து தந்தால் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காணாமல் போன அமெரிக்க வீரரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் C-130 ரக ராணுவப் போக்குவரத்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரான் வான்வழித் தாக்குதலில் அபுதாபியில் உள்ள போரூஜ் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
