கொள்ளையடிக்க வருகிறார்… உஷாராக இருங்க: புதுச்சேரி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சு

புதுச்சேரி: ” ஸ்டாலின் கொள்ளையடிப்பதற்கு வருகிறார். மக்கள் அனைவரும் உஷாராக இருங்கள்,” என புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

புதுச்சேரியின் எம்ஜி ரோடு, புஸ்ஸி தெரு, அண்ணா திடல் அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஸ்டாலின் நாளை பிரசாரத்துக்கு வருகிறார். தமிழகத்தில் கொள்ளையடித்தது போதாது என்று இங்கும் கொள்ளையடிக்க வருவார்.

பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல், மதுபான விற்பனை அதிகமாக இருப்பது ஸ்டாலின் கண்ணை உறுத்துகிறது. அங்கு அடிப்பது போல் இங்கும் அடிப்பதற்கு வருவார். உங்களுக்கு நன்மை செய்ய வரமாட்டார், நிதியைச் சுரண்டுவதற்கு வருவார். உஷாராக இருங்கள். இல்லையெனில் தமிழகத்தில் நடக்கும் கதி தான் இங்கும்.

திமுக குடும்பத்துக்காக இருக்கும் கட்சி. மக்களுக்காக பாடுபடவில்லை. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதாவது, கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஏனென்றால் கூட்டணி குழப்பமான நிலையில் உள்ளது. இண்டி கூட்டணி என்று சொல்லி மறந்துவிட்டார். தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி. அங்கு ஒரே கொள்கை என்பார். இங்கு கூட்டணிக் கட்சிக்கு நாமம் போட்டுவிட்டார்.

அதே கம்யூனிஸ்ட் தானே இங்கேயும் இருக்கிறது, அவர்களுக்கு இங்கு இடமில்லை. சுயநலவாதி ஸ்டாலின். அங்கு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி, இங்கு அந்தர் பல்டி அடித்து தனித்தனியே நிற்கிறார்கள். அங்கு ஒரு கொள்கை, இங்கு ஒரு கொள்கை. இரட்டை வேடம் போடும் திமுக. மக்களை சுரண்டுவதற்குத்தான் கட்சி நடத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Source link