சென்னை : ''திமுகவுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்தது மிகப்பெரிய துரோகம்,'' என, பாமக தலைவர் அன்புமணி

சென்னை : ”திமுகவுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்தது மிகப்பெரிய துரோகம்,” என, பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில், பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

திமுக அரசில், முதல்வர் ஸ்டாலினை சேர்த்து, 34 அமைச்சர்கள் உள்ளனர். அதில், 30வது இடத்தில் அமைச்சர் கணேசன், 32வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழியும் ஆகியோர் உள்ளனர். இவர்கள், மூவரும் பட்டியலினத்தவர்.

பட்டியலின மக்கள் ஓட்டுகளை வாங்கி, ஆட்சிக்கு வந்த திமுக அவர்களுக்கான மரியாதையை கொடுக்க மறுக்கிறது. இத்தகைய, திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார். ஐந்தாண்டுகளாக அவதிப்படும் அவர், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, இப்போது பின்வாங்கி விட்டார்.

ஊழல் திமுகவை ஒழிக்க வேண்டும்; அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, தேமுதிகவை விஜயகாந்த் துவக்கினார். ஆனால், இன்று அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது; இது பெரும் துரோகம். கூட்டணிக்கு தேமுதிக வந்தவுடன், 10 தொகுதிகளை திமுக கொடுக்கிறது. ஆனால், 2019ல் இருந்து கூடவே இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள்தான்; இதுதான் திமுக.இவ்வாறு அவர் பேசினார்.

Source link