பெங்களூரு: பெங்களூரில், போலீஸ் துறைக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற, மூன்று

பெங்களூரு: பெங்களூரில், போலீஸ் துறைக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, மல்லேஸ்வரம் 8வது மெயின் ரோட்டில், கர்நாடக போலீஸ் துறைக்கு சொந்தமான, 25,000 சதுர அடி நிலம் உள்ளது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 80 கோடி ரூபாயாகும்.

மின் கட்டண பில் இந்நிலத்தில், பாழடைந்த மல்லேஸ்வரம் பழைய போலீஸ் நிலையமும், போலீஸ் குடியிருப்பும் உள்ளன. இதில், நான்கு வீடுகளில் இன்ஸ்பெக்டர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.

இந்த வீடுகளுக்கு வழக்கமாக, மல்லேஸ்வரம் பழைய போலீஸ் நிலையம் பெயரில் மின் கட்டண பில் வரும். ஆனால், கடந்த மாதம் மஹாலட்சுமி என்பவர் பெயரில் பில் வந்தது.

அங்கு வசித்து வரும் லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் குமார், மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது, போலீஸ் துறை நிலம் மஹாலட்சுமி என்பவர் பெயருக்கு மாற்றப்பட்டதும், ஹெப்பாலில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சி நடப்பதும் தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் குமார், மல்லேஸ்வரம் போலீசில் புகார் அளித்தார்.

போலி ஆவணங்கள் விசாரணையின் முடிவில், கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் ஸ்ரீநாத் நாகரகட்டே, கிருஷ்ணா ஆகிய மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மஹாலட்சுமி உட்பட மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.

இந்த கும்பல், மல்லேஸ்வரம் போலீஸ் துறைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்றதுடன், பாழடைந்த நிலையில் இருக்கும் அரசு கட்டடங்கள் மற்றும் நிலங்கள் மீது குறி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில், அரசு ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

Source link