குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து மற்றும் பின்னணி விவரங்களை அறிந்துகொள்வதற்கு தான் அதிகளவிலான மக்கள் ஆர்வம் காட்டியது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affidavit.cci.gov.in/ பக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வேட்பாளரின் சொத்துகள் விவரம், குற்ற வழக்குகள் நிலுவை குறித்த வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் முதன் முறையாக களம் இறங்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது பிரமாண பத்திரத்தை மட்டும் இணையதளத்தில் இருந்து அதிகபட்சமாக சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
