கொளுத்தும் கோடை வெயிலால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரசார நேரத்தில் மாற்றம்

இன்று மாலை 5 மணி- புதுச்சேரி, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி- சீர்காழி, இரவு 7 மணி கடலூர், 8-ந்தேதி மாலை 4 மணி- திருவண்ணாமலை, இரவு 7 மணி- விழுப்புரம், 9-ந்தேதி மாலை 5 மணி- கரிசங்கால்- படப்பை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுவரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை மற்றும் மாலை என பிரசாரம் மேற்கொண்டு வந்தார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அவருடைய பிரசார பயண திட்டம் மாலை, இரவு என்று மாற்றப்பட்டுள்ளது.

Source link