ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை!

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்புக் காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி (24.02.2024) 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. 

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. அதோடு ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜாபர் சாதிக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னையில்  ஜாபர் சாதிக்குக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (06.04.2026) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாகப் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும், சென்னை எழும்பூரில் எழும்பூரில் உள்ள விடுதி, அண்ணாசாலையில் உள்ள விடுதி மற்றும் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள விடுதியின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் பறக்கும் படையினரோடு இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தலில் போது வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் முழுமையான சோதனைக்குப் பிறகு இந்த புகாரானது உண்மையா? அல்லது பொய்யா? என்பது குறித்த விவரங்கள் வெளிரும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் இனைந்து சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source link