சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 06) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 06) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 13,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் துவங்கிய பிறகு சற்று குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, கடந்த சில தினங்களாக இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 03ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 13,850 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,10,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 04) தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 255 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 05) ஞாயிற்றுக்கிழமை என்பதால் வர்த்தக சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 06) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 13,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் 3வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link