புதுச்சேரி: “மனைப்பட்டா இல்லை, அரசு வேலையில் முன்னுரிமை இல்லை என கேள்வி கேட்ட பொதுமக்களிடம், “என்னை தவிர யாரும் உங்களுக்கு உதவி செய்யமாட்டார்கள். நான் முதல்வராகி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி இன்று பிரச்சாரம் செய்தார். பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே கிராமம் தோறும் அவர் சென்று ஜக்கு (Jug) சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். உத்தரவாகிணிபேட் பகுதிக்கு அவர் சென்றபோது மக்கள் மலர் தூவி மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
