திருமண பயணத்துக்கு முழு ரெயில் பெட்டியை முன்பதிவு செய்த குடும்பம்- ஆடல் பாடலுடன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல்

இந்தியாவில், திருமணங்கள் என்றாலே உறவினர்களால் நிரம்பி வழியும் வீடுகள், சடங்குகள், முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து போடும் பயணத் திட்டங்கள், பல்வேறு வகையான உணவுகள், ஆடல், பாடல் என பெரும்பாலும் சாதாரணத் தருணங்களை மறக்க முடியாத நிகழ்வுகளாக மாற்றிவிடும். பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பாரம்பரியம், சமூகப் பிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமான கொண்டாட்டங்களுடனேயே திருமணங்களை நடத்த விரும்புகின்றன.

அந்த வகையில் ஒரு இந்தியக் குடும்பம் திருமணப் பயணத்திற்காக ஒரு முழு ரெயில் பெட்டியையும் முன்பதிவு செய்து பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் ரெயில் பெட்டி வெளியே மாலையால் அலங்காரம் செய்து விருந்தினர்களை வரவேற்கிறார். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரும், உற்சாகமான இசைக்கு நடனமாடுகின்றனர்.

Source link