பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்தவர் சுபாஷினி. இது போக சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவர் தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு காரணமாக சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.
ஆனால் இவர் நேற்று இரவு தனது அரையில் தூக்கு மாட்டி இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சுபாஷினியை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின் படி சுபாஷினி இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசி வந்ததாகவும் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கணவர்தான் அந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை தொடர்பு கொண்டு சுபாஷினி அறையை சென்று பார்க்க சொன்னதாகவும் அப்போது அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
சுபாஷினிக்கும் அவரது கணவருக்கும் 2024ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. அப்படி இருக்கையில் இன்னும் இரண்டாண்டு முடிவடைவதற்குள் சுபாஷினியின் இந்த விபரீத முடிவு சின்னத்திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
