சென்னை: தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது. 60 பேரிடம்

சென்னை: தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது. 60 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்பதால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து திமுக தன் வசப்படுத்தியது. அதுமட்டுமின்றி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் திமுக கட்டளையிட்டதால், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், ‘ தேர்தலிலேயே போட்டியிடவில்லை’ என்று ஜகா வாங்கிவிட்டார். கமல் எடுத்த முடிவு,’அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பரவலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து மக்கள் நீதி மய்யம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உரிய கட்டணத்தையும் செலுத்தினர். தேர்தலில் போட்டியிடாததால் விண்ணப்ப கட்டத்தை கட்சி நிர்வாகிகள் திரும்ப கேட்டிருந்தனர்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படாது. 60 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்றுவிட்டது என்பதால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Source link