சென்னை: பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வரும் பாஜ ஆளும்

சென்னை: பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வரும் பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்; தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பாஜ அமைச்சர்களும், பாஜ முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?

• தமிழ்மண்ணில் நின்று, ‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்’ என்று சொல்லி பிரசாரம் செய்யத் தயாரா?

• நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பாஜவால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

• கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?

• இவற்றுக்கெல்லாம், பழனிசாமியால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?

• கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?

தமிழகத்தை துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link