படத்துல லுக் தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது டைரக்டர் சார் தான். டைரக்டர் என்ன இந்த படத்துக்கு தேர்வு பண்ணதுக்கு காரணம் ‘இவர்னா இந்த கேரக்டர் தான் பண்ணுவார்’ அப்படிங்கற பிம்பம் இல்லாத ஒருத்தரை இந்த கதைக்கு தேர்வு செய்யணும்னு என்னை தேர்ந்தெடுத்ததாக சொன்னார்.
இது என்னை மிகவும் மகிழ்ச்சிபடுத்தியது. டீசர்-ல நீங்க பார்த்தது வெறும் 20% லுக் தான். இன்னும் அருமையான காட்சிகள் படத்துல இருக்கு.
பொதுவாகவே ஒரு நடிகனாக எனக்கு ஒரு வசனத்தை பேசும்போது, அதை எழுதியவர் எந்த நோக்கத்தில் எழுதினாரோ அந்த நோக்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பதில் குறிப்பாக இருப்பேன்.
ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை என்னை சுற்றி இருந்த பொதுமக்கள் நான் நடந்து வரும்போது எழுப்பிய சத்தம் எனக்கு போதையாக இருந்தது.
அப்போது நிஜ வாழ்வில் அப்படி நடக்கும்போது தலைவரின் உணர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்து நடித்தேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு கார் உண்மையாகவே பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்து வந்து பார்த்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்துச் சென்றனர்.
இந்த படம் மக்களை என்டர்டைன் செய்யத் தவறாது என்பதால் ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருவார்கள் என்பது என்னுடைய மிகப்பெரிய கணிப்பு.” என்றபடி முடித்துக் கொண்டார்.
