சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தவெகவுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ்

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தவெகவுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் நிர்வாகியும், ராகுலின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் என்பதால், முதற்கட்டமாக ராகுல் அங்கு சென்றுள்ளார். அதன்பிறகு, தமிழகம் வருவார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலால் தொண்டர்களிடையே தொண்டர்களிடையே ஏற்பட்டிருப்பது உண்மைதான். இங்கு யாருக்கு சீட் கொடுத்தது என்பதில் பிரச்னை இல்லை. ஆனால், 28, 30 சீட்கள் மட்டுமே காங்கிரசுக்கு இருப்பதால், 20 ஆண்டு காலமாகவே இந்த நிலை இருந்து வருகிறது.

இதற்கு தீர்வு காங்கிரசுக்கான மரியாதை மற்றும் சீட்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதனால் தான் இந்தக் கொந்தளிப்பும், அதிருப்தியும் இருக்கிறது. தமிழகத்தில் பாஜ மற்றும் காங்கிரசை ஒப்பிட்டு பாருங்கள். தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசை தான் விரும்புகிறார்கள். இந்தியாவிலேயே மதச்சார்பற்ற அரசியலைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். தமிழகத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறோம். இன்னமும் மக்கள் காமராஜர் ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் அனுமார் மாதிரி. எங்களின் பலம் எங்களுக்கே தெரியவில்லை.

திமுக கூட்டணியில் நாங்கள் கூடுதல் இடங்களை பெற முயற்சித்தோம். ஒரு பக்கம், ஒரு சின்ன தோசையைக் கொடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றார்கள். மற்றொரு பக்கம், கல்யாண விருந்து வைத்து எங்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தலைமை, பல்வேறு காரணங்களால் இந்த 28 இடங்களுக்கு ஒப்புக் கொண்டோம்.

தமிழகத்தில் எப்போதும் பாஜவுக்கு இடம் கொடுக்கவே கூடாது. இடமில்லை. அதைத் தவிர்க்க தான் இந்தத் தேர்தலும் சரி, தமிழகத்தின் போராட்டமும் சரி. கேரளாவில் அடுத்து காங்கிரஸ் முதல்வர் தான். அதேபோல புதுச்சேரியில் இடம் கிடையாது, இவ்வாறு அவர் கூறினார்.

Source link