சென்னை: திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு, சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக என்றாலே வாரிசு அரசியல். திமுகவில் தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்ப ஆட்சியாகவும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் இருந்தது திமுக ஆட்சி.
தமிழகத்தில் திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; இபிஎஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இது மாற்றத்திற்கும் நல்லாட்சிக்குமான நேரம். மயிலாப்பூர் மக்கள் ஜெயலலிதாவின் நல்லாட்சியை விரும்புகிறார்கள்; மயிலாப்பூர் மக்கள் தமிழிசைக்கு வாக்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
