குழந்தைகள் விசில் ஊதினால் சளி போய்விடும்; செங்கோட்டையனின் விசித்திர ஐடியா இணையத்தில் வைரல்

நமது நிருபர்

குழந்தைகளுக்கு சளி பிடித்தால் விசில் ஊதினால் சளி போய்விடும் என முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி பேசும் பொருளானது.

நாமக்கல் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:

நம்முடைய விசில் சின்னத்திற்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, விசில் சின்னம் தான் இந்தியாவை நாளை ஆளப் போகிறது. சின்னக் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும். சளி நின்று போய்விடும். மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள்.

முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால் தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. இவ்வாறு செங்கோட்டையன் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

Source link