விளாத்திகுளம் மாணவி கொலையில் கைதானவருக்கு மூதாட்டி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

இதையடுத்து மூதாட்டி வழக்கில் தர்மமுனீஸ்வரனின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்து, மூதாட்டி கொலையில் தர்மமுனீஸ்வரனுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதே கோரிக்கை தொடர்பாக விளாத்திக்குளம் மாணவியின் பெற்றோர் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மாணவியின் பெற்றோர் மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link