புதுச்சேரி : '' ஏன் எனது வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை,'' என நாம் தமிழர் கட்சி

புதுச்சேரி : ” ஏன் எனது வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரியில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்து தீர்த்த பிரச்னை எது என்று சொல்ல முடியுமா? மாநிலங்கள் கொடுக்கும் நிதி தான் மத்திய அரசுக்கு நிதி.அப்புறம் அவன் என்ன எனக்கு தருவது? மத்திய அரசுக்கு வருவாய்க்கு என ஏதும் உள்ளதா? மாநிலங்கள் தரும் நிதி தான் மத்திய அரசின் நிதி.

அப்புறம் நீ என்ன வட்டி கடை வைத்து இருக்கிறாயா, அரசு நடத்துகிறாயா அல்லது கந்துவட்டி கடை நடத்தி கொண்டு இருக்கிறாயா? வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் தான் வரி கொடா இயக்கம் நடத்துவோமா?

நான் முதல்வர் ஆனால், இப்படி எல்லாம் சேட்டை காட்டிருவியா நீ ?நேரடியாக கேட்கிறேன்?வரியை உனக்கு தந்துவிடுவேன் நான்? இவர்கள் லட்சம் லட்சமாக கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். வருமான வரித்துறை அமலாக்கத்துறைக்கு பயந்து கைகட்டி நிற்கிறார்கள். ஏன் என் வீட்டில் ஐடி ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தவில்லை. காரணம் வீட்டில் ஏதும் இல்லை.

நேர்மையாளனுக்கு மட்டும் தான் துணிவும் வீரனும் இருக்கும்.ஏன் என்னை அடக்கு, ஒடுக்கு பார்ப்போம். அதிகபட்சம் வழக்கு போட்டு ஜெயிலில் போடுவீர்கள். பயப்படும் ஆள் மாதிரி தெரிகிறதா? இவ்வாறு சீமான் கூறினார்.

கோபம்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்து சிலர் தவெக என கோஷம் போட்டனர். இதனால், கோபம் அடைந்த சீமான் அவர்களை ஒருமையில் திட்டினார். நாதகவினர் அறிவார்ந்தவர்கள். தவெகவினர் கோமாளிகள், தற்குறிகள் என்றார். அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அதனை கலைத்தனர்.

Source link