தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், இன்று (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி தனது வேட்புமணுவை இன்று தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “தமிழ்நாடு முழுதும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த 5 வருடம் மக்களுக்காக மகத்தான திட்டங்களை நிறைவேற்றியுள்ளர். முதல்வர் மு.க. ஸ்டாலின் 200 ஜெயிப்போம் என்றால். ஆனால் 234கும் ஜெயிப்பது போன்று இருக்கிறது.
அந்த அளவுக்கு இன்னைக்கு வரவேற்பு இருக்கிறது. மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை. சொல்லவில்லை. ஆனால் கூட்டமாக வந்துள்ளனர். இதுதான் திமுக. இன்னைக்கு மத சார்பற்ற முப்போக்கு கூட்டணி என்பது இதுதான். அந்த உணர்வு தான் வெற்றி. நிச்சயமாக வெற்றிதான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் பட்டியலில், ராணிப்பேட்டை தொகுதிக்கு அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய தந்தையும் அமைச்சருமான காந்தி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.
வினோத் காந்தி வேட்பாளராக அறிவித்ததை அடுத்து மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தனது மகனுக்கே அமைச்சர் காந்தி ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வினோத் காந்திக்கு யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்றும் அமைச்சர் காந்தி கூறியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து ராணிப்பேட்டை தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்திக்குப் பதிலாக அவரது தந்தையும், தற்போதைய அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி போட்டியிடுவார் என வினோத் காந்தி தெரிவித்தார். அதாவது, “ராணிப்பேட்டை தொகுதியில் எனது தந்தை காந்தி போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் விட்டுக் கொடுக்கிறேன்” என வினோத் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
