புதுச்சேரி: திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்தது. இந்த தொகை மூலம்

புதுச்சேரி: திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்தது. இந்த தொகை மூலம் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான 3 ஆண்டு பட்ஜெட் போட்டிருக்கலாம் என புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

முக்கியம்

புதுச்சேரியின் மண்ணாடிப்பட்டு என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியை மீண்டும் புதுச்சேரியில் அமைக்க வேண்டும்.தேஜ கூட்டணியில் வெற்றி பெற செய்தால், மிகப்பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்வேன்.காங்கிரசின் நாராயணசாமி அரசு, புதுச்சேரியை பின்தங்கிய மாநிலமாக மாற்றியது. அதை சரிசெய்யவே 5 ஆண்டுகள் சரியாக இருந்தது.

வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்றால் தேஜ கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.கடந்த முறை தேஜ கூட்டணி ஆட்சி அமைத்த போது, சிறிய இடங்களில் வெற்றி பெற்றதை கார்கே எள்ளி நகையாடினார். 300 இடமாக இருந்தாலும் 30 இடமாக இருந்தாலும் புதுச்சேரி இந்தியாவின் ஒரு அங்கம். புதுச்சேரியின் வெற்றி, நாட்டின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது.

தேஜ கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக சந்திக்கிறோம். ஆனால், இண்டி கூட்டணியில் பதவிக்காக சண்டை போட்டு அடித்துக் கொண்டு உள்ளனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இண்டி கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகின்றனர். திமுகவும், காங்கிரசும் 5 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. தேஜ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையை பறைசாற்றி கொண்டு இருக்கிறோம்.

3 ஆண்டு பட்ஜெட்

காங்கிரசின் நாராயணசாமி ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருந்தது. மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய சீட்டை கூவி கூவி விற்றனர். பட்டியலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்காமல், லஞ்சத்திற்காக விலை பேசினர். திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்தது. சிஏஜி அறிக்கையில் சொன்ன இந்த தொகை மூலம் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான 3 ஆண்டு பட்ஜெட் போட்டிருக்கலாம்.

ராகுல் கனவு

காங்கிரஸ் திமுக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 47 சதவீதம் உயர்ந்தது.தேஜ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் 47 சதவீதம் 4.3 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதுச்சேரிக்கு வந்த ராகுல், போர் காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துவருகிறது. அது கிடைக்கவில்லை எனக்கூறியுள்ளார்.

ராகுல் எப்போதும் கனவுலகில் வாழ்கிறார். ராகுல் எப்போதும் நேசிக்கும் பாகிஸ்தானில் தான் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் உயரவில்லை. உலகம் முழுவதிலும் பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை. அலுவலகம் செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்து பணியாற்ற முடியவில்லை. ஆனால், அப்படி இல்லை. பெட்ரோல், டீசல் உயரவில்லை. மோடி ஆட்சியில் எளிதாக கிடைக்கிறது.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Source link