`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!’ – தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்படும் மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் “அன்புத் தங்கைத் திட்டம்’ செயல்படுத்தப்படும்.

பெண் ஓட்டுநர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம் வழங்கும் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் தொடங்கப்படும். உயர்கல்வி பயிலும் 100 மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக ‘அவசர உதவி பட்டனுடன்’ கூடிய ‘காவலன் SOS’ செயலி உருவாக்கப்படும்.

புதுச்சேரி பாஜக தேர்தல் வாக்குறுதி

புதுச்சேரி பாஜக தேர்தல் வாக்குறுதி

குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ அரசுப் பணிகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு 60% இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப் பணியிடங்களும் விரைவாக நிரப்பப்படும். 10,000 இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இளம் தொழில்முனைவோருக்கு 3% வட்டியில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். பி.எம் கிசான் (PM KISAN) திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3,000 சேர்த்து, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 9,000 கிடைப்பது உறுதியாக்கப்படும். பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 200 கோடி தொகுப்பு நிதியம் (Corpus Relief Fund) உருவாக்கப்படும்.

Source link