காவல் மரணங்கள் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முத்துக்குமரன் வாசித்த தண்டனை விவரத்தில், “பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சம்பவம் நடந்துள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பும் அதிகமுள்ளது. மிக அரிதினும் அரிதாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. தந்தை முன் மகனையும், மகன் முன்பு தந்தையையும் காவல்துறையினர் அடித்துள்ளனர்.
குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். ஆகையால் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை என நீதிமன்றம் கருதுகிறது.
தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்; வழக்கு விவரங்களை வாசிக்கும் போது மனம் பதை வதைக்கிறது. இது போன்ற வழக்குகளில் காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அச்சத்தை ஏற்படுத்தாது.
ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. ஆகையால் பொருளாதார ரீதியிலான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். எதிர் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் தீர்ப்பளிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலுமுத்து எனஸவழக்கில் சம்பந்தப்பட்ட 9 போலீஸாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.
