தேர்தலுக்கு முன் மற்றொரு பஹல்காம்? கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற 23 மற்றும் 29-ந்தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக- மம்தா கட்சி இடையே கடுமையான வார்த்தை போர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடியா மாவட்டத்தில் உள்ள பேத்தாடஹாரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், நாங்கள் கொல்கத்தாவை குறி வைப்போம் எனச் சொல்கிறார். நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் மோடி சொல்லவில்லை?. என்ன காரணம்? வரைவு திட்டம் (BluePrint) தயாரா? தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு பஹல்காமா?

மத்திய அரசு பெங்கால் மக்களை குறிவைத்தார்., பெங்கால் தக்க பதிலடி கொடுக்கும். கொல்கத்தாவை குறிவைத்து யாராவது பேசினால், இந்திய மக்கள் அதை பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

Source link