சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் 20 அடி உள்வாங்கியதையொட்டி அதே சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதி.
சிதம்பரம் அருகே இன்று (06-04-26) அதிகாலை எருக்கன் காட்டுப்படுகை கிராமத்தையொட்டி செல்லும் நாகை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் திடீரென நொறுங்கி 20 அடிக்கு உள்வாங்கியது. இதனையொட்டி அந்த சாலையின் வழியாக போக்குவரத்து அனுமதிக்கவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஏற்கனவே இருந்த பழைய சாலையில் போக்குவரத்து அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் பாலம் உள்வாங்கியதையொட்டி அதே சாலையில் கொத்தட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியில் இலவசமாக வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர். இதில் மொத்தம் செல்வதற்கு 8 வழிகளும், வருவதற்கு 8 வழிகளும் உள்ளது. ஆக மொத்தம் 16 வழிகளிலும் சுங்கவரி இல்லாமல் வாகனங்கள் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். மேலும் பாலம் சீரமைத்தவுடன் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
