டொலிடோ: ஸ்பானிஷ் பாரா பாட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் ஒரு தங்கம், 2 வெள்ளி வென்றார்.
ஸ்பெயினில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. கலப்பு இரட்டையர் (‘எஸ்.எல்.3 – எஸ்.யு.5’) பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ஜோடி 21-15, 24-22 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டை சேர்ந்த நிதிஷ் குமார், துளசிமதி ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
ஆண்கள் ஒற்றையர் (‘எஸ்.எல்.3’) பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 10-21, 17-21 என, சகவீரர் நிதிஷ் குமாரிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் (‘எஸ்.எல்.3’ – ‘எஸ்.யு.5’) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 16-21, 21-12, 15-21 என, சகநாட்டை சேர்ந்த நவீன் சிவகுமார், சூர்ய காந்த் யாதவ் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. இத்தொடரில் பிரமோத் பகத், ஒரு தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கம் கைப்பற்றினார்.
பெண்கள் இரட்டையரில் (எஸ்.எல். 3 – எஸ்.யு.5) இந்தியாவின் மானசி ஜோஷி, துளசிமதி ஜோடி தங்கத்தை தட்டிச் சென்றது. பெண்கள் ஒற்றையரில் (எஸ்.யு.5) இந்தியாவின் துளசிமதி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மணிஷா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
