தொடரும் விற்பனை அழுத்தம் 6 மாதத்தில் 22 சதவீதம் சரிவு

ஹெச் .டி.எப்.சி., வங்கியின் பங்கு விலை, கடந்த ஆறு மாதத்தில், கிட்டத்தட்ட 22 சதவீதம் வரை சரிந்துள்ள நிலையில், வரும் நாட்களிலும் இந்த பங்கு விலை மேலும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக, நிதி ஆய்வு நிறுவனமான ‘மேக்வாரி’ எச்சரித்துள்ளது.

இந்நிறுவனம் மேலும் தெரிவித்ததாவது:

அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த மார்ச் காலாண்டில் மட்டும், கிட்டத்தட்ட 48 கோடி ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் அவர்களின் பங்கு விகிதம் 54.95 சதவீதத்திலிருந்து 51.8 சதவீதமாக குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பின்தொடரும் ‘எம்.எஸ்.சி.ஐ. இந்தியா’ குறியீட்டில், இந்த வங்கி பங்குக்கு வழங்கப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ 6.95 சதவீதம் மட்டுமே. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதை விட கூடுதலாக 2.40 முதல் 2.60 சதவீதம் வரை வைத்துள்ளனர். எனவே, அவர்கள் மேலும் பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இதன் பங்கு மதிப்பு, அதன் சொத்து மதிப்பை விட 1.30 மடங்கு குறைவாக கிடைப்பது முதலீட்டாளர்களை கவர்ந்தாலும், விற்பனை அழுத்தம் தொடர்வது பங்கின் விலையை இன்னும் குறைக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link