குறிஞ்சிப்பாடி: கடலுார் மாவட்டத்தில், தி.மு.க., முன்னோடிகளாக இருந்தவர்களில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

குறிஞ்சிப்பாடி: கடலுார் மாவட்டத்தில், தி.மு.க., முன்னோடிகளாக இருந்தவர்களில் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்.

கடந்த 1962ல் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட தி.மு.க., செயலராக இருந்தார். 1967ல் நடந்த தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார்; காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு சேர்மனாகவும் இருந்தவர்.

இவரது மகன் பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஐந்து முறை தி.மு.க., – எம்.எல்.ஏ., ஆகவும், மூன்றாவது முறையாக அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இவர் தன் தந்தை கிருஷ்ணமூர்த்தி 1988ல் வாங்கிய டி.ஏ.எப்., 1333 பதிவு எண் கொண்ட அம்பாசிடர் காரை, ஒவ்வொரு தேர்தலுக்கும் பயன்படுத்துவார்.

குறிப்பாக வேட்பு மனு தாக்கலின்போது, அந்த காரை தானே ஓட்டிச் சென்று மனு தாக்கல் செய்வதை சென்ட்டிமென்டாக செய்து வருகிறார். தன் தந்தை 38 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அம்பாசிடர் காரை, பன்னீர்செல்வம் தொடர்ந்து பராமரித்து வருகிறார்.

வழக்கமாக ‘டொயோட்டா பார்ச்சூனர்’ காரை பயன்படுத்தும் பன்னீர்செல்வம், நேற்றைய மனு தாக்கலுக்கு, தன் தந்தை நினைவாக பராமரித்து வரும் அம்பாசிடர் காரை, வீட்டில் இருந்து தானே ஓட்டி வந்து மனு தாக்கல் செய்தார். வி.சி.க., தலைவர் திருமாவளவன், பன்னீர் செல்வம் காரில் பயணம் மேற்கொண்டார்.

Source link