TN Assembly Election 2026 Live Updates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள்

வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும்.

பரப்புரை இன்றோடு முடிவு: புதுச்சேரி,கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை இன்றோடு நிறைவடைகிறது. ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

  • Apr 07, 2026 07:37 IST

    தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் அதிமுகவின் லீமா ரோஸ்

    ரூ. 1048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லால்குடி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் உள்ளார். கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Apr 07, 2026 07:35 IST

    விஜய் பரப்புரை இன்றும் ரத்து

    சென்னை சைதாப்பேட்டையில் இன்று த.வெ.க தலைவர் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது. காவல்துறை 1 மணி நேரமே அனுமதி தந்ததால் சைதாப்பேட்டை பரப்புரையை த.வெ.க ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Apr 07, 2026 07:33 IST

    பரப்புரை இன்றோடு முடிவு

    புதுச்சேரி,கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை இன்றோடு நிறைவடைகிறது. ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

  • Apr 07, 2026 07:32 IST

    வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும்.

Source link