வாஷிங்டன்: போர் நிறுத்தம் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க விதித்திருந்த காலக்கெடுவை, மீண்டும் நீட்டித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதற்கு, ஈரான் அவரை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.
போரை நிறுத்த வேண்டும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு டிரம்ப் அவகாசம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த அவகாசத்தை இன்று வரை நீட்டிப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பான டிரம்பின் பதிவுகளுக்கு ஈரான் கிண்டலடித்துள்ளது. ஜிம்பாப்வேயில் உள்ள ஈரானிய துாதரகம், ‘சாவியை நாங்கள் தொலைத்துவிட்டோம்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளது.
