எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்

நமது நிருபர்

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் 11வது முறையாக போட்டியிடுகிறார். காட்பாடி தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை 11:40 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் வந்தார்.

நேற்று பகல் 12:00 மணி வரை எமகண்டம் என்பதால் நல்ல நேரம் கிடையாது. எனவே, வேட்பு மனுவில் கையெழுத்திட, நல்ல நேரத்திற்காக துரைமுருகன் காத்திருந்தார். பின்னர், எமகண்டம் முடிந்ததும், 12:00 மணிக்கு பின், வேட்பு மனுவை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

Source link