மகளின் விவாகரத்தை மேளதாளம் முழங்க இனிப்புடன் கொண்டாடிய ஓய்வு பெற்ற நீதிபதி

இதனால், பிரணிதா விவாகரத்து கோரி குடும்​ப நல நீதிமன்றத்தை அணுகி​னார். நீண்ட சட்​டப் போராட்​டத்​திற்​குப் பிறகு, நீதி​மன்​றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்​தர​விட்​டது. தீர்ப்பு வெளி​யான உடனே, நீதி​மன்ற வளாகத்​திற்கு வெளியே காத்​திருந்த தந்தை ஞானேந்​திர சர்மா மற்​றும் உறவினர்​கள், மேள​தாளங்​கள் முழங்க உற்​சாக​மாகக் கொண்​டாடினர். அங்கிருந்​தவர்​களுக்கு லட்​டு​கள் வழங்கி தங்​கள் மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். இந்​தக் கொண்​டாட்​டத்​தின் போது பிரணிதாவின் குடும்​பத்​தினர் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தனர்.

அதில் பிரணி​தா​வின் புகைப்​படத்​துடன், “எனது மகளை நேசிக்கிறேன்; அவளே எனது இதயம், எனது ஆன்​மா” என்ற வாசகங்​கள் இடம்​பெற்​றிருந்​தன. பிரணிதா அணிந்​திருந்த உடையில் “எனது குடும்பம் எனது உயிர்” என்ற வாசகம் பொறிக்கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து பிரணிதா கூறுகை​யில், “இதுபோன்ற கடின​மான காலங்​களில் தோள் கொடுக்​கும் எனக்கு கிடைத்த போன்ற குடும்​பம் போன்று அனை​வருக்​கும்​ கிடைக்​க வேண்​டுகிறேன்​” என்​றார்​.

Source link