ஒரே இரவில் ஈரானை அழிப்போம்.! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை ஈரானை மீண்டும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

னஇதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலைக்குள் திறக்க வேண்டும். ஹார்முஸை திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின்நிலையங்கள், பாலங்களை அழிப்போம். செவ்வாய்க்கிழமை Power Plant Day, Bridge Day ஆக இருக்கும். இதுவரை ஈரானில் 13,000க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்துள்ளோம்” என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஒருவேளை ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், அது வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Source link