சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 10

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 130 ரூபாய் சரிந்து 13 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 05) ஆபரண தங்கம் கிராம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1, 11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய தினம்

நேற்று (ஏப்ரல் 06) காலை தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் குறைந்து, 13,810 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,120 ரூபாய் சரிவடைந்து, 1,10,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

நேற்று மாலையில், தங்கம் விலை கிராமுக்கு, 180 ரூபாய் உயர்ந்து, 13,990 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,440 ரூபாய் அதிகரித்து, 1,11,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 130 ரூபாய் சரிந்து 13 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Source link