திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து கனிமொழி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம் பெறவில்லை.
* 100 நாள் வேலையை டெல்லியில் இருந்தபடி முடிவு செய்வார்களாம்.
* 100 நாள் வேலை திட்டத்தையே ஒழிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
* 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுக்கப்படாதது பற்றியெல்லாம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவதில்லை.
* மிக மோசமான ஆட்சி நடத்தியவர் இபிஎஸ். திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
* சசிகலாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி முதலமைச்சர் ஆனவர் இபிஎஸ்.
* அதிமுக ஆட்சியில் பெண்கள் துணிந்து சென்று காவல் நிலையம் சென்று புகார் அளிக்க முடியாது.
* தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடியவர்கள் நமக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
