TN Assembly Election| வேட்புமனுக்கள் பரிசீலனை: எடப்பாடி, சீமான், பிரேமலதா மனுக்கள் ஏற்பு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று மனுக்கள் ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-

* எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிகப்பட்டுள்ளது.

* காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு ஏற்பு.

* ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வேட்புமனு ஏற்பு.

* திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வேட்பு மனு ஏற்பு.

* மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு ஏற்பு.

* ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு ஏற்பு.

* கடலூரில் அ.திமு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேட்பு மனு ஏற்பு.

* கோவை தொண்டாமுத்தூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்பு மனு ஏற்பு.

* கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு.

* போடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

* விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு.

* திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்பு மனு ஏற்பு.

* திரு.வி.க. நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்பு மனு ஏற்பு.

* தியாகராயநகரில் போட்டியிடும் த.வெ.க.பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வேட்புமனு ஏற்பு.

* மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள சுந்தர் சி வேட்பு மனு ஏற்பு.

* விருதுநகரில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனின் வேட்புமனு ஏற்பு.

* முதுகுளத்தூர் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வேட்பு மனு ஏற்பு.

* அருப்புக்கோட்டை தொகுதியில் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வேட்புமனு ஏற்பு.

* கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் அர்ச்சுணன் மனு ஏற்பு.

வேட்புமனுவை திரும்பப்பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

Source link