மேஷம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆதாயத்தைவிட விரயம் கூடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ரிஷபம்
ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பொருளாதார நலன் கருதி புது முயற்சி எடுப்பீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.
கடகம்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
சிம்மம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி
உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
துலாம்
வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். வருங்கால நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.
தனுசு
வரவு இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். தொழில் மாற்றம் பற்றி யோசிப்பீர்கள்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. கடன் சுமை குறையும்.
கும்பம்
நினைத்தது நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும்.
மீனம்
யோகமான நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். வருமானம் உயரும். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
