சேலம் : சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் காசி களமிறக்கப்பட்டுள்ளார்.இதனைத் தவிர்த்து இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக விஜய், இந்தத் தொகுதியில் அருண்குமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். இடைப்பாடி தொகுதியில் 36 பேர் களமிறங்கினர்.
இந்த தொகுதியில் வேட்புமனு பரிசீலனை இன்று நடந்தது. இதில், தவெகவின் அருண்குமார் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரை கடத்த முடியாததால் வேட்பாளர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
