இங்கிலாந்தின் பின்கள வீரரான ஹாரி மகுவேர், மான்செஸ்டர் யுனைடெட் அணி உடனான தன்னுடைய ஒப்பந்தத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளார்.
இந்த வருட சீசனுடன் அவருடைய ஒப்பந்தம் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் மேலும் 12 மாதங்கள் விளையாட இருக்கிறார்.
மகுவேர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கடந்த 2019-ம் ஆண்டு இணைந்தார். லெய்செஸ்டர் அணியில் இருந்து 97 மில்லியன் டாலருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். பின்கள வீரருக்கான உலகின் மிகப்பெரிய டிரான்ஸ்பராக இது அமைந்தது. இந்த அணிக்காக மகுவேர் 266 போட்டிகளில் விளையாடியுள்ளார். எஃப்.ஏ. கோப்பை, லீக் கோப்பை ஆகியவற்றை வென்ற அணியில் இருந்துள்ளார்.
முன்னாள் மானேஜர் எரிக் டென் ஹக் இவருக்கு இடத்தை பறித்தார். இதனால் கடந்த 2023-ம் ஆண்டு அணியில் இருந்து விலக முடிவு செய்தார். உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம பிடித்துள்ளார்.
