எதிர்க்கட்சி தலைவராக இருக்க இபிஎஸ்க்கு தகுதியில்லை: முதல்வர் ஸ்டாலின்

சீர்காழி: கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஏலத்தில் எடுத்து முதல்வர் ஆனவர் இபிஎஸ். அந்த பதவியில் இருக்க தகுதியேஇல்லை என்று சொல்லி நீங்கள் தோற்கடித்தீர்கள். தற்போது அவரே, தனக் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி இல்லை என்பதை போல் நடந்து கொள்கிறார் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஏலத்தில்

சீர்காழியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: பேசுவதற்கு எதுவும் இல்லாமல் கண்டதையும் பேசும் எதிர்க்கட்சி தலைவராக இபிஎஸ் உள்ளார். நாள்தோறும் கருத்துக்கணிப்பு வருகிறது. அதில் திமுகவின் வெற்றி எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதும் தோல்வி பயத்தில் இபிஎஸ் தரம் கீழே இறங்கி செல்கிறது. கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஏலத்தில் எடுத்து முதல்வர் ஆனவர் அவர். அந்த பதவியில் இருக்க தகுதியேஇல்லை என்று சொல்லி நீங்கள் தோற்கடித்தீர்கள். தற்போது அவரே, தனக்கு எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி இல்லை என்பதை போல் நடந்து கொள்கிறார். தனது தராதரம் இல்லாத பேச்சுகளால், தன்னையும், கட்சியையும் மக்களிடத்தில் அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்.

2026 தேர்தல் முடிவுகள் இபிஎஸ் என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்து துடைத்து எரியணும்.மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கொண்டு வர பார்க்கிறது. சர்ச்களை குறிவைத்து எப் ஆர்சிஏ சட்ட திருத்தத்தை கொண்டு வர பார்க்கின்றனர். பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் பார்லிமென்டை கூட்டி தொகுதி மறுவரையறை செய்ய துடிக்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகிறது.

அநியாயம்

முக்கியமான அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவசரம் அவசரமாக செய்யப்போகின்றனர். இதை கண்டித்து தேர்தல் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் ஏன் இந்த அவசரம் என கேட்கிறோம். இந்தியாவில் இருக்கும் அனைவரும் இதையே கேட்கின்றனர்.

தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகம் ஆகும்.தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் உ.பி.,க்கு இடையே தொகுதி எண்ணிக்கையில் பெரிய இடைவெளி உண்டாகும். இது அநியாயம் என எச்சரிக்கிறோம். கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்பாக தொகுதி மறுவரையறை குறித்த நான் வெளிப்படுத்தி வரும் அச்சத்தை கேள்வியாக எழுப்பி உள்ளார்.இதை எதைப்பற்றி எதுவும் பேச வக்கில்லாமல் இருக்கிறார் இபிஎஸ்

நல்லவேலை

இதற்கு காரணம், இபிஎஸ் மற்றும் அதிமுகவை பாஜ குத்தகைக்கு எடுத்து உள்ளது. டில்லி அணியில் இருந்து அடிக்கடி மத்திய அமைச்சர்கள் தமிழகம் படையெடுத்து வருகின்றனர் . நான் எழுப்பிய கேள்விகள் மற்றும் சவால்களுக்கு அவர்களிடம் பதில் இல்லை.தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்காக குரல் கொடுக்காத இபிஎஸ், வேறு எதற்காக பேசுவார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதினால் தான் தொகுதி மறுவரையறை ஏற்படுத்துவதற்கு விழிப்புணர்வு நடத்தினோம். இபிஎஸ் ஆட்சியாக இருந்திருந்தால் கூறுபோட்டு விற்றிருப்பார். நல்லவேலை அவர் இல்லை. வரும் தேர்தலில் இபிஎஸ் மற்றும் தேஜ கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தமிழகத்துக்கு தேஜ எந்த சிறப்பு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

மதுரையில் பாஜ வெற்றி பெற்றால் மெட்ரோ வரும் என்று பட்னாவிஸ் சொன்னார். மெட்ரோவுக்கும், இவருக்கும் என்ன சம்பந்தம்?. அவர் என்ன பிரதமரா?அந்த துறையை சார்ந்த மத்திய அமைச்சரா?அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற முதல்வர் பேசும் பேச்சா இது?பாஜ வெற்றி பெற வைத்தால் மெட்ரோ தருவோம் என கட்ட பஞ்சாயத்து செய்கிறார். இப்படி பிளாக் மெயில் செய்ய வெட்கமாக இல்லையா? இதற்கு இபிஎஸ் என்ன பதில் வைத்துள்ளார். இப்போதாவது வாய் திறந்து மக்கள் பிரச்னை குறித்து பேசுவீர்களா? இல்லை சொந்தக்கதை சோகக்கதையை செய்வீர்களா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Source link