குருகிராம்:டில்லி அருகே உள்ள குருகிராமின் செக்டார் 9ஏயில், சூர்யா விஹார் காலனி உள்ளது. அங்கு, இளம்பெண் ஒருவர்,

குருகிராம்:டில்லி அருகே உள்ள குருகிராமின் செக்டார் 9ஏயில், சூர்யா விஹார் காலனி உள்ளது. அங்கு, இளம்பெண் ஒருவர், தன் இரண்டரை வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, தற்கொலைக்கு முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணின் கணவரிடம் விசாரித்த போது, தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

இறந்த அந்த, 2.5 ஆண்டு பெண் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதித்துள்ள போலீசார், குருகிராம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண், கண் விழித்தால் மட்டுமே, இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் என கூறப்படுகிறது.

Source link