நியூயார்க்:ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் முதல்முறையாக, பொதுச் செயலர் பதவிக்கு இரண்டு பெண்கள்

நியூயார்க்:ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் முதல்முறையாக, பொதுச் செயலர் பதவிக்கு இரண்டு பெண்கள் போட்டியிடுகின்றனர்.

உலக அமைதி, பாதுகாப்பு, ஒத்துழைப்பு போன்றவற்றுக்காக ஐ.நா., சபை நிறுவப்பட்டு, 80 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை, சபையின் தலைவரான பொதுச் செயலர் பதவிக்கு, இதுவரை பெண்கள் போட்டியிட்டதில்லை.

இந்நிலையில் தற்போதைய பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெசின் இரண்டாவது பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடிவடைய உள்ளது.

இதையடுத்து புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்; அதில் இருவர் பெண்கள்.

ஒருவர் சிலியின் முன்னாள் அதிபர் மிஷேல் பாச்செலெட், மற்றொருவர் கோஸ்டாரிகாவின் முன்னாள் துணை அதிபர் ரெபெக்கா கிரின்ஸ்பான். பாலின சமத்துவம், பன்முகத்தன்மை போன்ற கொள்கைகளை வலியுறுத்தி இந்த முறை ஐ.நா., சபையில் பெண் தலைவருக்கு வலுவான ஆதரவு எழுந்துள்ளது.

Source link