டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: டிஎன்​பிஎஸ்சி நடத்​திய குரூப் 5 ஏ தேர்வு முடிவு​கள் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

தமிழக அரசு பணி​யில் உள்ள இளநிலை உதவி​யாளர்​கள் தலை​மைச் செயல​கத்​தில் உதவி பிரிவு அலு​வலர் மற்​றும் உதவி​யாளர் பணி​களில் சேர்​வதற்​காக டிஎன்​பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வு நடத்​தப்​படு​கிறது. அந்த வகை​யில் உதவி பிரிவு அலு​வலர், உதவி​யாளர் பதவி​களில் 32 காலி​யிடங்​களை நிரப்​பும் பொருட்டு குரூப்-5 ஏ தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு டிச.21-ம் தேதி நடை​பெற்​றது. விரி​வாக விடையளிக்​கும் வகை​யில் நடத்​தப்​பட்ட இத்​தேர்வை 406 பேர் எழு​தினர்.

இந்​நிலை​யில் தேர்வு முடிவு​களை டிஎன்​பிஎஸ்சி நேற்று வெளி​யிட்​டுள்​ளது. தேர்​வர்​கள் தங்​கள் மதிப்​பெண் மற்​றும் தரவரிசை விவரங்​களை தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) அறிந்​து​ கொள்​ளலாம் என டிஎன்​பிஎஸ்சி செய​லா​ள​ரும், தேர்வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலரு​மான (பொறுப்​பு) பானோத் ம்ரு​கேந்​தர் லால் தெரி​வித்​துள்​ளார்.

Source link