புதுடில்லி: இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் 24ம் தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் மேலும் தெரிவித்தாவது:
இரு நாடுகளும், க டந்தாண்டு டிச., 22ம் தேதி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டன. இந்த தடையற்ற ஒப்பந்தத்தின்படி அனைத்து வகையான இந்திய பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப் படுகிறது. நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செ ய்யப்படும் மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி பழங்கள் உள்ளிட்ட 95 சதவீத பொருட்களுக்கு, நம் நாட்டில் வரி குறைக்கப்படும்; அல்லது பூஜ்ஜியமாக்கப்படும்.
பால் மற்றும் பால் பொருட்களுக்கு வரிச்சலுகை கிடையாது. ஆண்டுக்கு 5,000 நியூசிலாந்து விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்தியாவுக்கு கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.
