‘ஐ .சி.எல்., பின்கார்ப்’ நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பில், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது.
இந்த என்.சி.டி., வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனில்குமார் கூறியதாவது:
“இது எங்களின் 9வது என்.சி.டி., வெளியீடு; இதன் வாயிலாக திரட்டப்படும் நிதியை முழுதும் தங்க நகை கடன் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதனால் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
