விமர்சனங்கள் எழுந்த நிலையில் விருப்ப மனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கிறது மநீம

இந்த நிலை​யில், விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி​ய​வர்​கள் அந்த பணத்தை திரும்ப வழங்க வேண்​டும் என்று கோரிக்கை வைத்​த​தாக சமூகவலைத்​தளங்​களில் செய்​தி​கள் வெளி​யா​யின. இதற்கு பதில் அளித்த மநீம மூத்த நிர்​வாகி​கள், விருப்ப மனு கட்​ட​ணம் திருப்​பிக்​கொடுக்க கூடியது அல்ல. அது கட்சி நிதிக்கு சென்​று​விடும் என்று விளக்​கம் அளித்​தனர். இது தொடர்​பாக விமர்​சனங்​கள் எழுந்​தன.

இதைத் தொடர்ந்​து, தேர்​தலில் போட்​டி​யிட விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் செலுத்​தி​ய​வர்​களுக்கு அக்​கட்​ட​ணத்தை திருப்​பிக் கொடுக்க மநீம கட்சி முன்​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​திய நபர்​களுக்கு கட்சி தலைமை அலு​வல​கத்​தில் இருந்து நேற்று அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில், ‘தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் மக்​கள் நீதி மய்​யம் சார்​பில் போட்​டி​யிட விருப்ப மனு தாக்​கல் செய்​திருந்​தவர்​கள் தாங்​கள் செலுத்​திய கட்​ட​ணத் தொகையை கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் ஏப்​ரல் 8 (இன்​று) முதல் 16-ம் தேதிக்​குள் நேரில் வந்து திரும்​பப் பெற்​றுக்​கொள்​ளலாம்​’ என கூறப்​பட்​டுள்​ளது.

Source link