“பாலு மகேந்திரா எனக்காக காம்ப்ரமைஸ் பண்ணி அன்னைக்கு ஷூட் பண்ணினார்!” – மனோகர் பேட்டி |”Balu Mahendra made a compromise for my sake and shot that day!” — Manohar (Interview)

ஒரு முறை அடிக்கடி வந்து போட்டோ கொடுக்கணும்னு அவசியம் இல்லை. நாங்களே கூப்பிடுவோம்னு சொல்லிட்டாரு. ஆனா, நான் மறுபடியும் அவர் முன்னாடி போய் நின்னேன். அந்த முறை அவர் கோபப்பட்டு என்னை திட்டிட்டாரு.

பிறகு, லைவ் டப்பிங் செய்கிற ஒரு சீன் வந்திருக்கு. அதுக்கு நடிகர்கள் தேடும்போது, நரேன் என்னைப் பற்றி சொல்லியிருக்கார். அவர் மூலமாகதான் ‘கதை நேரம்’ சீரியலுக்குள்ள போனேன்.

அந்த சீரியலோட முதல் ஷாட்ல கொஞ்சம் பயமிருந்தாலும், நல்லபடியாகப் பண்ணி முடிச்சுட்டேன். அந்த நேரத்துல வெற்றிமாறன்தான் எனக்கு டைலாக்ஸ் சொல்லுத் தருவார். அப்போவே பாலு மகேந்திரா சாருடைய நம்பிக்கையை அவர் பெற்றிருந்தார்.’கதை நேரம்’ ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும்போதுதான் எனக்கு பையன் பொறந்தான்.

என்னுடைய மனைவி பிரசவ வலிக்காக ஹாஸ்பிடல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும்போதும், நான் படப்பிடிப்புக்கு வந்துட்டேன். பிறகு எனக்கு மகன் பிறந்திருக்கிற தகவலை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு சொன்னாரு.

அதை கேட்ட பாலு மகேந்திரா சார், ‘ஏன்யா, தலை பிரசவத்துக்கு விட்டுட்டு வந்த’னு கேட்டார். பிறகு எனக்காக காம்ப்ரமைஸ் பண்ணி அன்னைக்கு ஷூட் பண்ணினார். இப்படி, ‘கதை நேரம்’ பற்றி பல விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்” என்றார்.

முழு பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Source link