விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்யும் மலையாளிகள்

எனினும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசிக்​கும் மலை​யாளி​கள், கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க விமான டிக்​கெட்​டுக்கு ரூ.2 லட்​சம் வரை செலவு செய்து சொந்த ஊருக்கு திரும்பி வரு​கின்​றனர். இதுதொடர்​பாக முனீர் என்​பவர் கூறும்​போது, “கடந்த 19 ஆண்​டு​களாக ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வரு​கிறேன். ஒவ்​வொரு தேர்​தலின்​போதும் கேரளா​வுக்கு சென்று வாக்​களிப்​பதை வழக்​க​மாக வைத்​திருக்​கிறேன். தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காக கேரளா செல்ல ரூ.2.3 லட்​சத்​துக்கு டிக்​கெட் வாங்கி உள்​ளேன். எவ்​வளவு செல​வா​னாலும் வாக்​குரிமையை செலுத்​து​வதை கடமை​யாக கருதுகிறேன்” என்று தெரி​வித்​தார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் அஜ்​மான் நகரில் வசிக்​கும் ஆஷா என்​பவர் கூறும்​போது, “கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக சொந்த ஊருக்கு செல்ல திட்​ட​மிட்டு உள்​ளேன். இதற்​காக ஒரு லட்​சம் ரூபாய்க்கு விமான டிக்​கெட் வாங்கி உள்​ளேன். எனது தங்கை நிம்​மி​யும் இதே தொகைக்கு விமான டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருக்​கிறார்” என்​றார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் சுமார் 10 லட்​சம் மலை​யாளி​கள் உள்ளனர். அவர்​களில் பெரும்​பாலானோர் வி​மான டிக்​கெட்​டுக்கு ரூ.2 லட்​சம் வரை செலவு செய்​து கேரளா​வுக்​கு திரும்​பி வருகின்​றனர்​.

Source link