தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை வேளச்சேரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* தீயசக்தி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவோம்.

* ஆட்சிக்கு வந்தவுடன் வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்களே செய்தார்களா?

* ஸ்டாலின் சார் வந்தாரு நீச்சல் அடிக்க விட்டாரு என பெண்கள் கிண்டல் செய்யும் அளவில் இருந்தது திமுக ஆட்சி.

* திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

* திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

* திமுக ஆட்சியில் சுதந்திரமாக வியாபாரம் கூட செய்ய முடியாத நிலை உள்ளது.

* ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள், ஏராளமான கலைக்கல்லூரிகளை கொண்டு வந்து அதிமுக சாதனை செய்தது.

* தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது. பல முறை பேரவையில் குரல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

* கஞ்சா விற்பனை செய்ததாக 2348 வழக்குகள் பதிவான நிலையில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

* திமுக நிர்வாகிகள் துணை நிற்பதால் கஞ்சா விற்பனை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை.

* அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதத்தில் போதைப்பொருள் விற்பனை ஒழிக்கப்படும்.

* போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

* தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அதிமுகவால் மட்டும் தான் கொடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link