அமெரிக்கா போர் நிறுத்தத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் பலன் கொடுத்தது எப்படி?

போர் நிறுத்தம் சார்ந்து சுமார் 11 மணி நேரம் இடைவிடாது பாகிஸ்தான் பணியாற்றியதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உலக வல்லரசு நாடுகள் போர் நிறுத்தம் சார்ந்த முயற்சிகளை முன்னெடுக்காத சூழலில் பாகிஸ்தான் இதை மேற்கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

“ஈரானும், அமெரிக்காவும் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்காசிய பிராந்தியத்தில் உடனடியாக இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இதை அமெரிக்க நட்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அமைதியை உறுதி செய்ய இரண்டு தரப்பு ஆர்வம் காட்டியது. வரும் நாட்களில் நல்ல செய்தி வரும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று ஈரான் – அமெரிக்கா இடையில் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இரு நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source link